ஜார்க்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் ராஜினாமா


ஜார்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் ராஜினாமா
x
தினத்தந்தி 3 July 2024 2:42 PM GMT (Updated: 4 July 2024 5:25 AM GMT)

கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் சம்பாய் சோரன்.

ராஞ்சி,

பண மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போதைய முதல்-மந்திரி சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஞ்சியில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை சம்பாய் சோரன் வழங்கினார். கவர்னருடனான சந்திப்பின் போது முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனும் உடனிருந்தார்.

ஹேமந்த் சோரன் பதவியேற்க ஏதுவாக முதல்-மந்திரி பதவியை சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக பதவியேற்க கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரி 31-ல் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் கைதானதை அடுத்து சம்பாய் சோரன் ஜார்கண்ட் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story