ரூ.13 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யுங்கள்: அமித்ஷாவுக்கு ஜார்கண்ட் முதல்-மந்திரி கடிதம்

மத்திய அரசுக்கு ஜார்கண்ட் மாநில அரசு ரூ.13 ஆயிரத்து 299 கோடி செலுத்த வேண்டி உள்ளது
ராஞ்சி
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பு. இருப்பினும், ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல் ஒழிப்பு பணியில் மத்திய ரிசர்வ் படை போலீசாரை ஈடுபடுத்தியதற்காக மத்திய அரசுக்கு ஜார்கண்ட் மாநில அரசு ரூ.13 ஆயிரத்து 299 கோடி செலுத்த வேண்டி உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை செலுத்தும் நிலைக்கு ஜார்கண்ட் தள்ளப்பட்டால், மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். எனவே, மேற்கண்ட பாக்கித்தொகையை மத்திய அரசு முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






