காஷ்மீரில் தேசவிரோத செயலில் ஈடுபட்ட 5 போலீசார் உள்பட 6 பேர் பணிநீக்கம்

காஷ்மீரில் தேசவிரோத செயலில் ஈடுபட்ட 6 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகளை கண்காணித்து அவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கும் வகையில் கவர்னர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் காஷ்மீர் முழுவதும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது பயங்கரவாதிகளுக்கு துப்பு கொடுப்பது, அவர்களுக்கு ஆதரவாக ஆட்களை ஒருங்கிணைப்பது, நிதி திரட்டுவது மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு வைத்திருந்த அரசு அதிகாரிகள் மீது சந்தேகம் வலுத்தநிலையில் அவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். விசாரணையில் போலீஸ் ஏட்டு, பள்ளி ஆசிரியர் உள்பட 6 அரசு அலுவலர்களுக்கு பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதனால் அவர்கள் 6 பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆதாரங்களின்படி, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒரு தலைமைக் காவலர் பரூக் அகமது ஷேக், அத்துடன் நான்கு காவலர்கள், காலித் ஹுசியன் ஷா, ரஹ்மத் ஷா இர்ஷாத் அகமது சால்கோ மற்றும் சைப் டின் மற்றும் நஜாம் தின், ஒரு ஆசிரியர் ஆகியோர் அடங்குவர்.

இந்த நபர்களுக்கு எதிராக சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகள் கணிசமான ஆதாரங்களை சேகரித்ததாக கூறப்படுகிறது, இது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுடன் அவர்களின் தொடர்பை உறுதி செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com