வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நீக்கப்பட்ட 500 போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பணி

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நீக்கப்பட்ட 500 போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று பி.எம்.டி.சி. தலைவர் நந்தீஸ் ரெட்டி உறுதிபட தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நீக்கப்பட்ட 500 போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பணி
Published on

சாந்திநகர்:

பெங்களூரு சாந்திநகரில் உள்ள பி.எம்.டி.சி. அலுவலகத்தில் நடைபெற்ற ராஜ்யோத்சவா நிகழ்ச்சியில் பி.எம்.டி.சி. வாரிய தலைவர் நந்தீஸ் ரெட்டி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த பணி நீக்கத்தை எதிர்த்து ஊழியர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டது. அதன்படி, 1,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு இருந்தது. பி.எம்.டி.சி. போக்குவரத்து கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 500 ஊழியர்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாமல் உள்ளது. அந்த 500 ஊழியர்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் பணி வழங்கப்படும். பி.டி.எம்.சி.க்காக புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட உள்ளது. பி.டி.எம்.சி. வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com