இந்தியா-அமெரிக்க முப்படைகளின் கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது

இந்தியா-அமெரிக்க முப்படைகளின் கூட்டுப் பயிற்சி, இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு நட்புறவின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
இந்தியா-அமெரிக்க முப்படைகளின் கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது
Published on: 

விசாகப்பட்டினம்,

இந்தியா-அமெரிக்கா முப்படையினர் பங்கேற்கும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண் கூட்டுப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இது தொடர்பாக, பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கூட்டுப்பயிற்சி

இந்தியா-அமெரிக்கா முப்படையினர் பங்கேற்கும் மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணக் கூட்டுப்பயிற்சியான டைகர் ட்ரையம்ப் 2026 தொடக்க நிகழ்ச்சி 2026 நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள கடல்சார் போர் மையத்தில் நடைபெற்றது. பெருமளவிலான மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின் போது, இரு நாடுகளின் ஆயுதப்படையினருக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, கூட்டு திட்டமிடல், செயல்படும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடற்படை தளபதி பங்கேற்பு

இத் தொடக்க விழாவில் இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் விஷால் பிஷ்னோய், அமெரிக்க பசிபிக் கடற்படையின் துணைத்தளபதி ரியர் அட்மிரல் ஜோவாக்கின் ஜே மார்ட்டினஸ் டி பினிலோஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

பாதுகாப்பு நட்பு

இப்பயிற்சி, இந்தியா, அமெரிக்காவின் உத்தி சார்ந்த கடல்சார் நடவடிக்கைகளின் நெருங்கிய ஒருங்கிணைப்பையும், இரு நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு நட்புறவையும் பிரதிபலிக்கிறது.

டைகர் ட்ரையம்ப் 2026

இந்திய தரப்பில் கடற்படையின் கடல்சார் செயல்பாட்டாளர்கள் இந்திய ராணுவத்தின் தரைப்படை பிரிவுகள், இந்திய விமானப்படையின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பிரதிநிதிகள் முப்படைகளின் சிறப்பு படைவீரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர். அத்துடன் டைகர் ட்ரையம்ப் 2026-ன் இந்த பயிற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த குழுவும் முதல் முறையாகப் பங்கேற்கிறது.

நிபுணர்கள்

அமெரிக்க கூட்டுப்படையில் அமெரிக்க விமானப்படை, தரைப்படை, கடற்படை ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களுடன் விண்வெளி, சைபர், மருத்துவம், வெடிபொருள் அகற்றம் பணியை சேர்ந்த நிபுணர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X