நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மகர் துவார் நுழைவு வாயிலில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேட்டி எடுப்பது வழக்கம். ஆனால், அப்பகுதியில் இன்று காலை செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் முன்பிருந்த பல்வேறு அனுமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில், பல்வேறு நிறுவனங்களின் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை உடனடியாக நீக்க கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com