கார்கில் போர் வெற்றி ஓட்டம்: டெல்லியில் நடந்தது

டெல்லியில் கார்கில் போர் வெற்றி ஓட்டம் நேற்று நடந்தது.
கார்கில் போர் வெற்றி ஓட்டம்: டெல்லியில் நடந்தது
Published on

புதுடெல்லி,

காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்ற, ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய படைகள் போரிட்டன. 2 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போர் வெற்றியின் 20-வது ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கார்கில் போர் வெற்றி ஓட்ட நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த ஓட்டத்தை விஜய் சவுக் பகுதியில் லெப்டினன்ட் ஜெனரல் அஸ்வினி குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், சிறுவர், சிறுமிகள் உள்பட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com