கர்நாடகா: சாலை தடுப்பில் பைக் மோதி நர்சிங் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

பைக்கை அதிவேகமாக ஓட்டியதால் கெளரி சங்கரின் பைக் கட்டுப்பாட்டை இழந்து மைசூர் சாலையின் தடுப்பில் பயங்கரமாக மோதியது.
கர்நாடகா: சாலை தடுப்பில் பைக் மோதி நர்சிங் மாணவர்கள் 2  பேர் உயிரிழப்பு
Published on

கர்நாடகா,

கேரள மநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் கெளரி சங்கர் (வயது 22) மற்றும் கண்ணூரைச் சேர்ந்தவர் அதுல் சி பி (வயது 22) ஆகிய இரண்டு பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த மைசூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பயின்று வந்தனர்.

விபத்து

அவர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாமல் பைக்கில் மைசூரிலிருந்து கெங்கேரிக்கு சென்றனர்.அப்போது கெளரி சங்கர் பைக்கை அதிவேகமாக ஓட்டினார். இதனையடுத்து ஆர்.ஆர். பல் மருத்துவக் கல்லூரி அருகே பைக் அதிவேகமாக சென்றபோது கெளரி சங்கரின் பைக் கட்டுப்பாட்டை இழந்து மைசூர் சாலையின் தடுப்பில் பயங்கரமாக மோதியது.

உயிரிழப்பு

சாலையின் தடுப்பில் மோதிய வேகத்தில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த மைசூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் இழப்பு இரண்டு குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com