கர்நாடகா: மாண்டியா கோர்ட்டுக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

இது திரும்பவும் நடைபெறாமல் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
கர்நாடகா:  மாண்டியா கோர்ட்டுக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
Published on

மங்களூரு

கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்ட நீதிபதியின் மெயிலுக்கு செய்தி ஒன்று வந்தது. அதில், மாண்டியா கோர்ட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் அது வெடிக்க செய்யப்படும் என்றும் அச்சுறுத்தல் தகவல் இருந்துள்ளது.

இதுபற்றி போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதனால், கோர்ட்டு நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

Also Read
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மைக்கை அணைக்க சபாநாயகரிடம் பட்டன் உண்டா...? ஓம் பிர்லா விளக்கம்
கர்நாடகா:  மாண்டியா கோர்ட்டுக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

எல்லோரும் மாண்டியா கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடந்தது. கடந்த 16-ந்தேதி இதேபோன்று, கர்நாடகாவில் உள்ள மங்களூரு மாவட்ட கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

கர்நாடக ஐகோர்ட்டின் தார்வாத் கிளை, தார்வாத் மாவட்ட கோர்ட்டு, மாண்டியா, குடகு, ஹாவேரி உள்ளிட்ட கோர்ட்டுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் செய்தி கிடைத்ததும் உடனடியாக கோர்ட்டு வளாகத்திற்கு போலீசார் சென்றனர். கோர்ட்டில் இருந்து வழக்கறிஞர்கள், பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

எனினும், விரிவான சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீசார் உறுதி செய்தனர். காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கு பதிவானது.

இந்த நிலையில், 2-வது முறையாக மாண்டியா கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, இதனை செய்தது யாரென போலீசார் கண்டறிய வேண்டும். இது திரும்பவும் நடைபெறாமல் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எங்களின் பயம் முழுவதும் தீர்க்கப்பட வேண்டும் என வழக்கறிஞர்கள் சார்பில் கோரிக்கையாக கேட்டு கொள்கிறேன் என கூறினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com