கர்நாடக தேர்தல்: காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்பு

ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்கப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தல்: காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்பு
Published on

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கிய நிலையில், நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி புலிகேசி நகரில் அ.தி.மு.க. வேட்பாளர் அன்பரசன் அதிமுக வேட்பாளாக அறிவிக்கப்பட்டார். அன்பரசனின் தாக்கல் செய்த வேட்பு மனு புலிகேசி நகரில் ஏற்கப்பட்டுள்ளது. அவர் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அதேபோல், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தார். அதன்படி புலிகேசி நகர், கோலார், காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து இருந்தார்.

இதில் புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பில் நெடுஞ்செழியன் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. கோலார் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் ஆனந்தராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதே நேரம் காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com