இன்ஸ்டாகிராம் காதல், 6 மாத காலம் லிவ்-இன் உறவு.. அடுத்து நடந்த பயங்கரம்

இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி மல்லேஸ்வரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் கடந்த 6 மாதங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
ஷரத் என்பவர் அனுஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
ஷரத், அனுஷா
Published on

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரைச் சேர்ந்தவர்கள் அனுஷா (வயது20) மற்றும் ஷரத் (வயது 27). ஷரத் பெங்களூருவில் தண்ணீர் டேங்கர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராம் மூலம் நட்பில் இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் காதல்

நாளடைவில் நட்பு காதலாக மாறியது. இதனைத்தொடர்ந்து இந்த இன்ஸ்டாகிராம் ஜோடி பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியில் வாடகை வீட்டில் கடந்த 6 மாதங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொலை

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஷரத், அனுஷாவை கழுத்தை நெரித்துள்ளார். எனவே, அனுஷா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அனுஷா இறந்ததால் பதற்றம் அடைந்த ஷரத், ஒரு வழக்கறிஞரை சந்தித்து இந்த சம்பவம் குறித்து கூறினார்.

கைது

பின்னர் வக்கீல் கொடுத்த தகவலின்பேரில் சேஷாத்ரிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அனுஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஷரத் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, இன்று (புதன்கிழமை) கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஷரத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com