கேதார்நாத் புறப்பட்ட ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கம்

ஹெலிகாப்டரில் 6 பேர் புறப்பட்டனர்.
கேதார்நாத் புறப்பட்ட ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கம்
Published on: 

டேராடூன்,

மும்பையில் இருந்து கேதார்நாத் புறப்பட்ட ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கபட்டது.

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து 6 பேர் ஹெலிகாப்டரில் இன்று காலை 8 மணிக்கு உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்திற்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு புறப்பட்டனர்.

ஹெலிகாப்டர் தரையிறக்கம்

தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மும்பையில் சவுராஷ்டிரா பகுதியில் இருந்து புறப்பட்டு உத்தரகாண்ட் அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தனர். அப்போது ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, ஹெலிகாப்டரை விமானி உத்தரகாண்ட்டின் நியூ தெஹ்ரி கோட்வாலி பகுதியில் உள்ள மைதானத்தில் அவசர அவசரமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com