

கேதார்நாத்
உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டில், ஏறக்குறைய 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர். இன்றுடன் இந்த யாத்திரை நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், உத்தராகண்டில் நடப்பு ஆண்டுக்கான சார்தாம் யாத்திரையின் இறுதி நாளில், கேதார்நாத் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் மட்டும் 8,323 பக்தர்கள் வழிபட்டனர். இந்த நிலையில், நடப்பாண்டு யாத்திரை சீசனில் கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களின் மொத்த எண்ணிக்கை 19,22,138 ஆக உயர்ந்துள்ளது.
உத்தராகண்டில், கேதார்நாத் கோவிலில் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் ராணுவ இசைக்குழுவினர் கண்கவர் இசை நிகழ்ச்சி நடத்தினர். குளிர்காலத்தையொட்டி நாளை கோவில் நடை சாத்தப்பட உள்ள நிலையில், இந்த சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.