கேரள மந்திரி தாக்கப்பட்ட விவகாரம்: திட்டமிட்ட பொய் என பா.ஜ.க. குற்றச்சாட்டு

திட்டமிட்ட இந்த பொய்யால், மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது என பா.ஜ.க. குற்றச்சாட்டாக கூறியுள்ளது.
கேரள மந்திரி தாக்கப்பட்ட விவகாரம்: திட்டமிட்ட பொய் என பா.ஜ.க. குற்றச்சாட்டு
Published on

கண்ணூர்

கேரளாவில் கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தொடங்கி வைத்து விட்டு, திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தார்.

அவர் வந்தே பாரத் ரெயிலில் ஏறுவதற்காக சென்றபோது திடீரென்று அங்கு வந்த காங்கிரஸ் கட்சியின் கண்ணூர் மாவட்ட மாணவர் அமைப்பு தலைவர் தலைமையில் மாணவர் அமைப்பினர், இளைஞரணியை சேர்ந்த சிலர் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். அவர்கள், மந்திரி வீணா ஜார்ஜ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read
ஜப்பானில் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக மேக்லெவ் ரெயிலில் யோகி ஆதித்யநாத் பயணம்
கேரள மந்திரி தாக்கப்பட்ட விவகாரம்: திட்டமிட்ட பொய் என பா.ஜ.க. குற்றச்சாட்டு

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் பின்பு, மந்திரி வீணா ஜார்ஜ் சிகிச்சைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மந்திரியை தாக்கிய காங்கிரசின் இளைஞர் அணியினரின் செயல் அத்துமீறிய செயல், கண்டனத்துக்குரியது என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

இந்த சம்பவத்தில், கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில் மந்திரி வீணா ஜார்ஜ் 4 மணிநேரம் சிகிச்சை பெற்றார். இதன்பின்னர் இரவு 8 மணியளவில் மருத்துவமனையில் இருந்து மருத்துவ அறிக்கை வெளியானது. அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய வேண்டும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கழுத்தில் அவருக்கு காயம் எப்படி ஏற்பட்டது என்பதற்கான விவரங்கள் வெளியிடப்படவில்லை. கை, கழுத்து பகுதியில் காயத்திற்கு சிகிச்சை பெற்றார் என தகவல் பரவியது. இதுபற்றி கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் கூறும்போது, மாணவர் காங்கிரஸ் பிரிவை சேர்ந்தவர்கள் அவரை தாக்கினர். இதனால், மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என கூறினார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கருப்பு கொடி போராட்டத்திற்கு தலைமையேற்ற கண்ணூர் மாவட்ட தலைவர் அதுல், பொருளாளர் அக்சய் மிட்டல் மற்றும் முபாஸ், பிதுல் பாலன் மற்றும் முகமது யாசின் ஆகிய 5 பேர் மீது கண்ணூர் நகர போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அவர்கள் தொடர்ந்து முன்னேறி செல்லாமல் உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரை யாரும் நெருங்க முடியாத வகையில் போராட்டக்காரர்களை தனியே அழைத்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் அத்துமீறல் சம்பவத்திற்காக ரெயில்வே போலீசாரும் அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்த நிலையில், கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த வி.டி. சதீசன் இன்று கூறும்போது, காங்கிரஸ் தொண்டர்கள் மந்திரிக்கு அருகிலேயே கூட செல்லவில்லை. ரெயில்வே போலீசாரும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். தாக்குதலுக்கான எந்த சான்றும் கிடைக்கவில்லை.

கேரள சுகாதார மந்திரியை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கி விட்டனர் என முதல்-மந்திரி உள்பட சி.பி.எம். கட்சியின் தலைவர்கள், திட்டமிட்ட பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த பொய்யால், மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. மந்திரிக்கு அருகே ஒரு போராட்டக்காரர் கூட செல்லவில்லை என எல்லா பத்திரிகையாளர்களுக்கும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரியும்.

காங்கிரஸ் தொண்டர்களில் 4 அல்லது 5 தொண்டர்களே இருந்தனர். அவர்கள் அனைவரையும் 30-35 போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விட்டனர் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com