மலப்புரம்: கால்பந்து போட்டியின்போது பட்டாசு வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயம்


மலப்புரம்: கால்பந்து போட்டியின்போது பட்டாசு வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயம்
x

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது பட்டாசு வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மலப்புரம் (கேரளா),

மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று பட்டாசுகள் வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

யுனைடெட் எப்.சி. நெல்லிகுட் மற்றும் கே.எம்.ஜி. மாவூர் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்குவதற்கு முன்பு, பட்டாசுகள் வெடிக்கப்பட்டபோது, தவறுதலாக மைதானத்தின் அருகே அமர்ந்திருந்த பார்வையாளர்களை நோக்கி பட்டாசுகள் பாய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பட்டாசு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே கால்பந்து போட்டியை மீண்டும் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. போட்டி வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும், அந்த போட்டிக்கான அனுமதி முற்றிலும் இலவசம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.


Next Story