கேரளா: போக்குவரத்து காவலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் பெண் காவலர் பலி

கேரளாவில் போக்குவரத்து காவலர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், சக பெண் காவலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா: போக்குவரத்து காவலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் பெண் காவலர் பலி
Published on

ஆலப்புழா,

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மாவேலிக்காராவில் உள்ள வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் சிவில் காவல்துறையில் பணிபுரிந்து வருபவர் சௌமியா புஷ்பாகரன் (34). அவர் மீது உடன் பணியாற்றும் போக்குவரத்து காவலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த காவலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளியான போக்குவரத்து காவலர் 50 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் காவலருக்கு 3 குழந்தைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com