நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய முடிவு; மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இன்று மத்திய அமைச்சரவைக்கூட்டம் நடைபெறுகிறது
கோப்பு படம்
Published on

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்தி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்​பில் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. டெல்லி ஜந்​தர் மந்​தரில் நேற்று 34-வது நாளாக சிஜேபி போராட்​டம் நீடித்​தது. இதில் ஆயிரக்​கணக்​கானோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை

சிஜேபி நிர்​வாகி​கள் பேச்​சு​வார்த்​தைக்கு வரு​மாறு மத்​திய சுகாதா​ரத் துறை அமைச்​சர் ஜே.பி. நட்டா நேற்று மீண்​டும் அழைப்பு விடுத்​தார். இதுகுறித்து சிஜேபி செய்​தித் தொடர்​பாளர் கவுரவ் தாஸ், ஜந்​தர் மந்​தரில் கூறும்​போது, “யாருடைய வீட்​டுக்​கும், அலு​வல​கத்​துக்​கும் நாங்​கள் செல்ல மாட்​டோம். எங்​களோடு பேச்​சு​வார்த்தை நடத்த விரும்​பி​னால் ஜந்​தர் மந்​தருக்கு வரலாம் அல்​லது பொது​வான ஓரிடத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்​தலாம்" என்றார்.

அமைச்சரவைக் கூட்டம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இன்று மத்திய அமைச்சரவைக்கூட்டம் நடைபெறுகிறது. நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்று கூறினார். எனவே இன்று நடைபெறும் கேபினட் கூட்டத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com