நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட கூடாது: எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்

எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று அவர்களை நான் வலியுறுத்துகிறேன் என்றார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட கூடாது:  எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. 25 நாட்கள் 19 அமர்வுகளாக நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 15-ந்தேதி நிறைவடைய உள்ளது.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளை, நீட் தேர்வு முறைகேடு, ராமர் கோவில் காணிக்கை முறைகேடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர், மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு டெல்லியில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது, மத்திய இணை மந்திரி எல். முருகன், மத்திய சட்டத்துறை மந்திரி ராம் மேக்வால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அவர் கூறும்போது, நாடாளுமன்றம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர். அப்படி இல்லையெனில் அது ஜனநாயகத்திற்கான வீழ்ச்சியாக இருக்கும்.

வேண்டுகோள்

நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்ப கூடும். எனினும், எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று அவர்களை நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

அவர்கள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்த நிச்சயம் குரல் எழுப்பலாம். ஆனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட கூடாது. அதன் கண்ணியத்தில் சமரசம் கூடாது என்றும் வேண்டுகோளாக கேட்டுக்கொண்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com