

திருவனந்தபுரம்,
கேரளாவின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக இருப்பவர் கொடியேறி பாலகிருஷ்ணன். இவரது மகன் பினோய் கொடியேறி. இவர் மீது, பீகாரை சேர்ந்த 33 வயது பார் டான்சர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். துபாயில் பார் டான்சராக இருந்த போது பினோய் உடன் தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி என்னை பார்க்க பாருக்கு வருவார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.
என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். மும்பைக்கு வந்து இருவரும் வாழ்ந்தோம். அவரால் எனக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஆண்டுதான் அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது எனக்கு தெரியும் என கூறியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பாலியல் பலாத்காரம் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி கொடியேறி பாலகிருஷ்ணன் கூறும்பொழுது, எனது மகனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தீர விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
இதற்கு நானோ, எனது கட்சியோ பொறுப்பேற்க முடியாது. நாங்கள் யாரும் அவருக்கு உதவமாட்டோம். போலீசார் இந்த விவகாரம் பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அதனை அவர்கள் தொடரட்டும். எனது குடும்ப உறுப்பினர்களின் தவறுகளுக்கு எனது கட்சியோ அல்லது நானோ பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.