

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தனது 15 ஆண்டுகால ஆட்சியை இழந்தது.தேர்தல் தோல்விக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் அடுத்தடுத்து பெரும் பின்னடைவுகளை சந்த்தித்து வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 58 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.வை எதிர்க்கட்சி தலைவராக நியமித்தனர். இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கொல்கத்தா மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பிர்ஹாத் ஹக்கீம் ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ.வாகவும் உள்ள ஹக்கீம், கொல்கத்தா மாநகராட்சி மேயராக பணியாற்றி வந்தார்.