

நொய்டா,
நொய்டாவில் சம்பள உயர்வு கோரிக்கைகளை முன்னிட்டு இன்று நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் வன்முறையாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், டி-பிளாக் ஹோசியரி காம்ப்ளக்ஸ் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும், போராட்டக்காரர்கள் டெல்லி-மீரட் விரைவுச்சாலை மறித்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டிஎன்டி மேம்பாலம், சில்லா எல்லை மற்றும் செக்டர் 62 உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நின்றன.
இதனால் வாடகைக் கார் கட்டணங்களும் அதிகரித்து, பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு மாகாண ஆயுதக் காவல் படை களமிறக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
தற்போது, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.