

புதுடெல்லி,
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆதார் எண்ணுடன் பான்கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மற்றும் வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகிய இரண்டும் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
2018-19 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகசாம் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதார்-பான்கார்டு எண்களை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.