

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 3-ம் தேதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து பேசினார். பயங்கரவாதத்தை ஒழிக்க பயனுள்ள அதிகமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களின் உரிமைகள் அவர்களிடம் கொடுக்கவே நாங்கள் பணியாற்றுகிறோம். கடந்த ஒரு வருடத்தில் அதிகமான பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுள்ளது. அங்கு சட்டசபைத் தேர்தலை அடுத்த 6 மாத காலங்களில் நடத்தலாம், என கூறியுள்ளார் அமித்ஷா.