டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதின - அவசர அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதின - அவசர அவசரமாக தரையிறக்கம்
Published on

டெல்லி,

டெல்லியில் இருந்து 135 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் லடாக் யூனியன் பிரதேசம் லே நகருக்கு இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 30 நிமிடத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் மீது பறவைகள் மோதின.

விமானத்தின் 2வது எஞ்ஜினில் பறவைகள் மோதியது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இது சாதாரண நடைமுறைதான் என்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com