சுற்றுச்சூழலை பாதுகாப்போம்! - ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி பதிவு


சுற்றுச்சூழலை பாதுகாப்போம்! - ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி பதிவு
x

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தங்களது எக்ஸ் சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருப்பதாவது;

ஜனாதிபதி திரவுபதி முர்மு:

"கிரகத்தைப் பாதுகாப்பதில் மக்கள் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடத்தையை ஊக்குவிக்கவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் நமது கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமிக்கு வழிவகுக்கும்."

பிரதமர் மோடி:

"உலக சுற்றுச்சூழல் தினத்தில், நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கும் நமது முயற்சிகளை ஆழப்படுத்துவோம். நமது சுற்றுச்சூழலை பசுமையாகவும் சிறப்பாகவும் மாற்ற அடிமட்டத்தில் பாடுபடும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்."

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story