அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மதுக்கடைகள் மூடல்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி மற்றும் தமிழகம் வருகிறார்.
அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மதுக்கடைகள் மூடல்
Published on

புதுச்சேரி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி மற்றும் தமிழகம் வருகிறார். இன்று மாலை புதுச்சேரி செல்லும் அவர், கோரிமேட்டில் நாளை நடைபெறும் புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் காவல் கொடி (President's Colour) வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார்.

மதுக்கடைகள் மூடல்

இந்த நிலையில், அமித்ஷா வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று, நாளை என இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், இன்றும், நாளையும் புதுச்சேரியில் அமித்ஷா பயணிக்கும் வழித்தடங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மதியம் 3 மணி வரை மதுக்கடைகளையும் மூட புதுவை அரசு உத்தவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com