சாம்பாரில் கிடந்த பல்லி; சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு உடல்நல குறைவு

கர்நாடகாவில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஹாவேரி,

கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி செத்து கிடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனை சாப்பிட்ட அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு ராணிபென்னூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன்பின்பு சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com