மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை

மாங்கனி திருவிழா வருகிற 27-ம்தேதி மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
மாங்கனி திருவிழா
கோப்புப்படம்
Published on

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயம் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு மாங்கனி திருவிழா வருகிற 27-ம்தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக 28-ம்தேதி பரமதத்தர், காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம், 29-ம்தேதி சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வரும்போது பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிலையில் காரைக்கால் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, வருகிற 29-ம்தேதி காரைக்கால் மண்டலத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜூலை 18-ம்தேதி (சனிக்கிழமை) காரைக்கால் மண்டலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com