நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் நிறைவேறுமா? இன்று வாக்கெடுப்பு

தொகுதி மறு​வரையறை தொடர்​பான 3 மசோ​தாக்​கள் மக்​களவை​யில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மசோ​தாக்​கள் மீது இன்று வாக்​கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் நிறைவேறுமா? இன்று வாக்கெடுப்பு
Published on

மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றிய மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல மைப்பு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதேபோல இடஒதுக்கீட்டை செயல்படுத்த சட்டசபை மற்றும் மக்களவை தொகுதிகளும் மறுவரையறை செய்யப்பட உள் ளது. இதற்காகவும் திருத்தம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இவை தொடர்பாக மத்திய அரசு தயார் செய்த அரசி யலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங் களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026 ஆகிய​வற்றை மத்​திய சட்ட அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வால் மக்​களவை​யில் அறி​முகம் செய்​தார். இதே​போல யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த ) மசோதா 2026-ஐ உள்துறை அமைச்​சர் அமித் ஷா மக்​களவை​யில் அறி​முகம் செய்​தார்.

இந்த 3 மசோ​தாக்​களுக்​கும் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திமுக உள்​ளிட்ட இந்தியா கூட்டணி கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படாது என உறுதி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும். அதே போல, கேரளாவில் 20-ல் இருந்து 30 ஆகவும், ஆந்திராவில் 25-ல் இருந்து 38 ஆகவும், தெலங்கானாவில் 17-ல் இருந்து 26 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் அதிகரிக்கும். கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா போன்றே தற்போதைய மசோதாவும் உள்ளது. எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒரு புள்ளிகூட கூடுதலாக சேர்க்கப்படவில்லை. என்றார். மேற்கூறிய மசோதாக்கள் மீது மக்​களவை​யில் இன்​றும் விவாதம் தொடர்​கிறது. விரிவான விவாதத்​துக்​குப் பிறகு மசோ​தாக்​கள் மீது இன்று மாலை 4 மணிக்கு வாக்​கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com