எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
லுக் அவுட் நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு புகார் வழக்கில் லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.

பல கோடி ரூபாய் முறைகேடு

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியதோடு, தேடப்படும் நபராக அறிவித்து 'லுக் அவுட்' நோட்டீசையும் பிறப்பித்தனர்.

லுக்​-அவுட் நோட்​டீஸ்

தனக்கு எதி​ரான வழக்​கை​யும், லுக்​-அவுட் நோட்​டீஸையும் ரத்து செய்​யக் கோரி எ.வ.வேலு தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்​கில் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​சார் ஜூலை 27-ம் தேதிக்​குள் பதில் அளிக்க வேண்​டும். அது​வரை மனு​தா​ரருக்கு எதி​ராக போலீ​சார் கடும் நடவடிக்கை எது​வும் எடுக்​கக்கூடாது.

லுக்​-அவுட் நோட்​டீஸ் விவ​காரத்​தில் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்​புத்துறை அதி​காரி​கள் முன்பு ஜூலை 15-ம் தேதி (இன்று) விசா​ரணைக்கு ஆஜராக வேண்​டும்” என்று நிபந்​தனை விதித்​தது. மேலும் லுக்​-அவுட் நோட்​டீசுக்கு இடைக்​காலத் தடையும் விதித்​தது.

சுப்ரீம்கோர்ட்டில் மேல்​முறை​யீடு

இந்த உத்​தரவை ரத்து செய்​யக் கோரி தமிழ்​நாடு லஞ்ச ஒழிப்​புத்​துறை சார்​பில் வழக்​கறிஞர் விருந்தா பண்​டாரி சுப்ரீம்கோர்ட்டில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​தார். சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன் தமிழ்​நாடு அரசின் கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் பிரசந்தோ சந்​திர சென் ஆஜராகி, முன்​னாள் அமைச்​சர் எ.வ. வேலுவை கைது செய்​யக் கூடாது என்ற பொருளில் பொது​வான உத்​தரவை ஐகோர்ட்டு தெளிவு இல்​லாமல் பிறப்​பித்​துள்​ளது. மேல்​முறை​யீடு மனுவை செவ்​வாய்​கிழமை (நேற்​று) விசா​ரிக்க வேண்​டும் என்று முறை​யிட்​டார்.

இன்று விசாரணை

சென்னை ஐகோர்ட்டு உத்​தர​வில் தெளிவு பெற ஐகோர்ட்டையே நாடலாம் என்று முதலில் தெரி​வித்த தலைமை நீதிப​தி, பின்​னர் தமிழ்​நாடு அரசின் மனுவை புதன்​கிழமை (இன்று) விசா​ரிப்​ப​தாகத் தெரி​வித்​தார். இதனிடையே, தமிழ்​நாடு அரசின் மேல்​முறை​யீடு மனுவை விசா​ரிக்​கும் போது, தனது தரப்பு கருத்​தைக் கேட்​காமல் எவ்​வித உத்​தர​வை​யும் பிறப்​பிக்​கக் கூடாது என்று குறிப்​பிட்டு எ.வே.வேலு சார்​பில் வழக்​கறிஞர்​ டி.குமணன்​ கேவியட்​ மனு தாக்​கல்​ செய்திருந்தார்.

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் எ.வ.வேலு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட வேண்டியதில்லை, எ.வ.வேலு ஒத்துழைப்பார் என்றும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் உரிய ஆய்வு செய்யாமல் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து எனும் தமிழ்நாடு அரசின் வாதம் சுப்ரீம்கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com