மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் வருமான இழப்பு: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க ஆந்திர அரசு திட்டம்

ஆந்திர பிரதேசத்தில் 'ஸ்திரீ சக்தி' என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் வருமான இழப்பு: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க ஆந்திர அரசு திட்டம்
சந்திரபாபு நாயுடு
Published on: 

அமராவதி,

ஆந்திராவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தால் வருமான இழப்பை சந்தித்து வரும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.231.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்

ஆட்டோ ஓட்டுநர்கள் சேவை திட்டம்

ஆந்திர பிரதேசத்தில் 'ஸ்திரீ சக்தி' என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு தங்களது வாழ்வாதாரம் மற்றும் அன்றாட வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு, ஓட்டுநர்களின் இழப்பை சரிக்கட்டவும், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக கைகொடுக்கவும் 'ஆட்டோ ஓட்டுநர்கள் சேவை' என்ற புதிய திட்டத்தை ஆந்திர அரசு அறிமுகம் செய்துள்ளது.

வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம்

இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக ஆட்டோ, மோட்டார் கேப் மற்றும் மேக்ஸி கேப் ஆகியவற்றை வைத்து வேலை செய்து வரும் தகுதியுள்ள ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

ரூ.231.13 கோடி

அதன்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த நிதியுதவியை வழங்குவதற்காக ரூ.231.13 கோடியை விடுவித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, தகுதியுள்ள ஓட்டுநர்களின் வங்கி கணக்குகளில் ரூ.15 ஆயிரம் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

X