போக்குவரத்து கழகத்தை மராட்டிய மாநில அரசுடன் இணைக்க முடியாது- மந்திரி அனில் பரப்

போக்குவரத்து கழகத்தை மாநில அரசுடன் இணைக்க முடியாது என சட்டசபையில் கூறிய மந்திரி அனில் பரப், போராடும் ஊழியர்கள் அனைவரும் 30-ந் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
போக்குவரத்து கழகத்தை மராட்டிய மாநில அரசுடன் இணைக்க முடியாது- மந்திரி அனில் பரப்
Published on

ஊழியர்கள் போராட்டம்

மராட்டிய மாநில போக்குவரத்து கழகத்தில் சுமார் 95 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இது நாட்டிலேயே பெரிய போக்குவரத்து கழகமாக கருதப்படுகிறது. இந்தநிலையில் போக்குவரத்து கழகத்தை, மாநில அரசுடன் இணைக்க வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் முதல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர்.

இந்தநிலையில் தற்போது பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு திரும்பி உள்ள நிலையில் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய 3 நபர் கமிட்டியை மாநில அரசு அமைத்து இருந்தது. அந்த கமிட்டியும் ஆய்வை முடித்து அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்து உள்ளது.

இணைக்க சாத்தியமில்லை

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் சட்டசபையில் போக்குவரத்துதுறை மந்திரி அனில் பரப் பேசியதாவது:-

மாநில அரசு அமைத்த 3 நபர் கமிட்டி அவர்களின் அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர். அதை மாநில அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. போக்குவரத்து கழகத்தை, அரசுடன் இணைக்க சாத்தியமில்லை என கமிட்டி அதன் அறிக்கையில் கூறியுள்ளது. மாநில போக்குவரத்து கழகமும், அரசும் தங்களால் முடிந்ததைவிட அதிகமாக ஊழியர்களுக்கு செய்து உள்ளது. எனினும் இந்தநிலையில் வருகிற 30-ந் தேதிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இதுவரை ஒரு ஊழியர் கூட பணி நீக்கம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com