மராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா மீது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கடும் அதிருப்தி

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா மீது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கடும் அதிருப்தி
Published on

மும்பை,

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அடுத்ததாக 48 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட மராட்டியத்தில், 35 இடங்கள் வரை போட்டியிட பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

இற்காக மும்பை சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தொகுதி பங்கீடு குறித்து சிவசேனா தலைவரான முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவரான துணை முதல்-மந்திரி அஜித்பவாரிடம் பேசினார். அப்போது சிவசேனாவுக்கு 8 தொகுதிகளையும், அஜித்பவார் தேசியவாத காங்கிரசுக்கு 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கிடையே அறிக்கை போர் நடந்து வருவதால், மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com