மின்சார ரெயில்களில் அனைத்து அரசு ஊழியர்களையும் அனுமதிக்க ரெயில்வேக்கு மராட்டிய மாநில அரசு கடிதம்

மின்சார ரெயில்களில் அனைத்து அரசு ஊழியர்களையும் அனுமதிக்க வேண்டும் என ரெயில்வேக்கு மராட்டிய மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.
மின்சார ரெயில்களில் அனைத்து அரசு ஊழியர்களையும் அனுமதிக்க ரெயில்வேக்கு மராட்டிய மாநில அரசு கடிதம்
Published on

மும்பை,

கொரோனா 2-வது அலை காரணமாக மும்பையில் மின்சார ரெயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. அத்தியாவசிய, சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு செயலாளர் ஸ்ரீரங் கோலப் மத்திய, மேற்கு ரெயில்வே பொது மேலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மின்சார ரெயில் டிக்கெட், பாஸ்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அல்லது யுனிவர்சல் பாஸ் இருந்தால் அவர்களுக்கு மின்சார ரெயில் டிக்கெட் வழங்கப்பட வேண்டும். ஆனால் உரிய அடையாள அட்டை இருந்தும் பல மாநில அரசு ஊழியர்களுக்கு டிக்கெட், பாஸ்கள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்து உள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளித்து உள்ளது. எனவே உரிய அடையாள அட்டை உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு டிக்கெட், பாஸ்களை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com