விமான நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல்; பயணி கைது


விமான நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல்; பயணி கைது
x

அமெரிக்க டாலரை கடத்தி செல்ல திட்டமிட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிற்கு நேற்று துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணி அமெரிக்க டாலரை கடத்தி செல்ல திட்டமிட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் விமான பயணிகளுடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அமிர்தசரசை சேர்ந்த பயணி தனது பையில் 41 ஆயிரத்து 400 அமெரிக்க டாலர்கள் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த அமெரிக்க டாலர்களின் இந்திய மதிப்பு 35 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.

ரிசர்வ் வங்கி அனுமதியின்றி இந்திய பயணி 3 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான பணத்தை பயணத்தின்போது எடுத்து செல்ல முடியாது. இது கடத்தல் பணம் என்பது உறுதியானதையடுத்து அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story