நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது விபரீதம்.. கடலில் தவறி விழுந்து இளைஞர் பலி

தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த இளைஞர் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

மும்பையில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்த 20 வயது இளைஞர் உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த தினமான நேற்று மாலை அனில் அர்ஜுன் ராஜ்புத் என்பவர் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கடலில் இருந்து அந்த இளைஞரை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

செல்பி எடுக்கும்போது தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com