

காந்திநகர்,
குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் இவரது நிறுவனத்தில் மனைவியை இயக்குநராக நியமித்து இருந்தார். ஆனால் கணவர் மனைவியிடம் அங்கு மீட்டிங் , இங்கு மீட்டிங் என ஏமாற்றிவிட்டு ஊர் ஊராக சுற்றி வந்து உள்ளார். இதில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கணவரின் காரில் அவருக்கு தெரியாமல் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தி உள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் அவரது கணவர் பெங்களூருக்கு பயணம் செய்யப்போவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். மனைவி ஜிபிஎஸ் டிராக்கர் மூலம் கணவரின் இருப்பிடத்தை சரிபார்த்தபோது கார் புனேவில் இருப்பதைக் கண்டுபிடித்து உள்ளார்.
உடனடியாக புனேவில் உள்ள ஓட்டலைத் தொடர்பு கொண்டு உள்ளார். சம்பந்தபட்ட அந்த நபர் தனது மனைவியுடன் ஓட்டலில் அறை எடுத்து உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு,தனது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, கணவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டலுக்குச் சென்றதைக் கண்டுபிடித்தார்.
உடனடியாக இதுகுறித்து ஹிஞ்சேவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெண்ணின் கணவரும் அவர்து கள்ளக்காதலியும் தலைமறைவாகி உள்ளனர்.