மணிப்பூர்: கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி 5 மாணவிகள் உயிரிழப்பு

மணிப்பூரில் கல்வி சுற்றுலாவுக்காக சென்ற பஸ் சாலை விபத்தில் சிக்கியதில் 5 மாணவிகள் உயிரிழந்து உள்ளனர்.
மணிப்பூர்: கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி 5 மாணவிகள் உயிரிழப்பு
Published on

நானி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் நானி மாவட்டத்தில் கோபும் என்ற பகுதியில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு 2 பஸ்கள் கல்வி சுற்றுலாவுக்கு சென்றுள்ளன.

இந்த நிலையில் மாணவிகள் பயணித்த ஒரு பஸ், பழைய கச்சார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பள்ளி மாணவிகள் சிக்கி கொண்டனர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, மலை மாவட்டத்தில் லாங்சாய் பகுதியருகே மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து 55 கி.மீ. தொலைவில் பஸ் விபத்தில் சிக்கியுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் கல்வி சுற்றுலாவுக்காக வந்த இடத்தில் மாணவிகள் பயணித்த பஸ் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பைரன் சிங்கும் இந்த சம்பவத்திற்கு டுவிட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். மாநில பேரிடர் பொறுப்பு படை, மருத்துவ குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிக்கு உதவி வருகின்றனர் என அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com