கற்பனை செய்ய முடியாத வேதனையை மணிப்பூர் அனுபவித்து வருகிறது: ராகுல் காந்தி

மணிப்பூர் குறித்து ஏதேனும் 2 அனுதாப வார்த்தைகளாவது பிரதமரிடமிருந்து வேண்டும் என்ற நம்பிக்கை இன்று முற்றிலும் மறைந்து விட்டது
கற்பனை செய்ய முடியாத வேதனையை மணிப்பூர் அனுபவித்து வருகிறது: ராகுல் காந்தி
Published on

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி சமூகத்தினரிடையே மோதல் வெடித்தது. மே 2023-இல் இனக்கலவரங்கள் வெடித்தன; இதில் குறைந்தது 260 பேர் உயிரிழந்ததுடன், 59,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் இன்றுவரை அங்கு வன்முறைச் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மத்திய பாஜக அரசு மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "மணிப்பூர், பல ஆண்டுகளாக எரிந்து வருகிறது. மீண்டும் இன்று வெறுப்பு மற்றும் வன்முறையின் நெருப்பால் 20 வீடுகள் சாம்பலாகிவிட்டன. இரட்டை என்ஜின் அரசு, ஜனாதிபதி ஆட்சி இருந்தபோதிலும், மாநிலத்தில் மோதல் போக்கு தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர், எண்ணற்ற குடும்பங்கள் அழிந்துவிட்டன.கற்பனைகூட செய்ய முடியாத வேதனையை மணிப்பூர் அனுபவித்து வருகிறது.

மதம், சாதி, மொழி, பிராந்தியம், அடையாளம் ஆகியவற்றின் பெயரில் மக்களைப் பிளவுபடுத்தும் மோடி அரசின் பிளவுபடுத்தும் கொள்கையின் விளைவாகவே இந்த மோதல் நீடிக்கிறது. மணிப்பூர் குறித்து ஏதேனும் இரண்டு அனுதாப வார்த்தைகளாவது பிரதமரிடமிருந்து வேண்டும் என்ற நம்பிக்கை இன்று முற்றிலும் மறைந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com