பணமதிப்பு நீக்கம்: மன்மோகன் சிங்கின் கருத்து உண்மையாகி விட்டது - ஜெய்பால் ரெட்டி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கம் பற்றி சொன்னக் கருத்து உண்மையாகிவிட்டது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்பால் ரெட்டி கூறினார்.
பணமதிப்பு நீக்கம்: மன்மோகன் சிங்கின் கருத்து உண்மையாகி விட்டது - ஜெய்பால் ரெட்டி
Published on

ஹைதராபாத்

ஹைதராபாத் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.

மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் ஆறு நிமிடங்கள் பேசினார். அப்போது பண மதிப்பு நீக்கம் நாட்டின் வருமானத்தில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தை குறைக்கும் என்றார். அதே போல சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் ரூ. 1.50 இலட்சம் கோடி வீழ்ச்சி கண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மொத்த தேசிய உற்பத்தியில் ஒரு சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.

மக்களின் துன்பங்கள் 50 நாட்களில் தீர்ந்து விடும் என்று மோடி கூறியிருந்தார். ஆனால் அவரின் பண மதிப்பு நீக்க முடிவு கோடிக்கணக்கான மக்களை நகர்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு இடம் பெயரச் செய்தது. விவசாயிகளால் பயிரிடக் கூட முடியவில்லை என்றும் குறிப்பிட்டார் ஜெய்பால் ரெட்டி.

மேலும் அவர் பேசும் போது சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்திருந்தாலும் அதன் பலன் இந்திய மக்களுக்கு போய்ச்சேரவில்லை என்றார். சுமார் ரூ. 1.20 இலட்சம் கோடி மிச்சமாகிறது. இந்தப்பணம் எப்படி செலவாகிறது என்பதை அரசு சொல்ல வேண்டும். இது ஒரு பகல் கொள்ளை என்றார் ஜெய்பால் ரெட்டி.

தேர்தல் சமயத்தில் வெளி நாட்டில் கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ. 80 இலட்சம் கோடியை மீட்டு கொண்டு வருவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் அரசு சர்வதேச உடன்படிக்கைகள் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதை தடுக்கிறது என்று கூறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார் ஜெய்பால் ரெட்டி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com