

மும்பை,
நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிகள், அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.
இதனை தொடர்ந்து பேசிய மோகன் பகவத் கூறுகையில், சுதந்திர தினம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளது. சுதந்திர தின போராட்டம் 1857ம் ஆண்டு தொடங்கியது. நமது முன்னோர்கள் பல்வேறு தியாகங்களை செய்து 90 ஆண்டுகள் கழித்து சுதந்திரத்தை பெற்றனர். நாடு மகிழ்ச்சியாகவும், வளமுடனும், பாதுகாப்பாகவும், உலகிற்கு சரியான பங்களிப்பை அளிப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். அதேவேளை, இந்த நோக்கத்திற்கு எதிராகவும், நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும், ஏராளமான தனி நபர்கள், பல சக்திகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சவால்களை சந்தித்து உலகிற்கு வழிகாட்டியாக விஸ்வகுருவாக இந்தியாவை மாற்ற வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.