போலீசில் சரண் அடைய முயன்ற தளபதியை காலி செய்த மாவோயிஸ்டு தலைவர்

கந்தமால் மாவட்டத்தில கடந்த 22-ந்தேதி பாதுகாப்பு படையினருடனான மோதலில் ஜகேஷ் சுட்டு கொல்லப்பட்டார்.
போலீசில் சரண் அடைய முயன்ற தளபதியை காலி செய்த மாவோயிஸ்டு தலைவர்
Published on

புவனேஸ்வர்

சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்திற்குட்பட்ட கிராம பகுதியை சேர்ந்தவர் அன்வேஷ் என்ற ரேணு. ஒடிசாவில் மாவோயிஸ்டுகளின் மண்டல தளபதியாக செயல்பட்டு வந்த இவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.22 லட்சம் பரிசு தொகை தரப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், போலீசில் சரண் அடைபவர்களை பொது மன்னிப்பு அளித்து அரசு ஏற்று கொண்டு வருகிறது. இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவதற்கான வகையில், அவர்களுக்கு நிதியுதவியும் அளித்து வருகிறது. இதனை முன்னிட்டு போலீசில் சரணடையும் நோக்கில் அன்வேஷ் இருந்திருக்கிறார்.

Also Read
இந்திய பாரம்பரிய உடை அணிந்து பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்திய நெதன்யாகு
போலீசில் சரண் அடைய முயன்ற தளபதியை காலி செய்த மாவோயிஸ்டு தலைவர்

இதனையறிந்த மாவோயிஸ்டு தலைவர் சுக்ரு, அவரை சரணடைய கூடாது என கூறி எச்சரித்து இருக்கிறார். இந்நிலையில், மாவோயிஸ்டு இயக்கத்தில் இருந்து விலகி போலீசில் சரண் அடைவதற்காக அன்வேஷ் தயாராகி வந்திருக்கிறார்.

அப்போது, மாவோயிஸ்டுகளான சிலா மற்றும் ஜகேஷ் ஆகியோர் உதவியுடன் மாவோயிஸ்டு தலைவர் சுக்ரு, அன்வேஷை தடுத்து பார்த்திருக்கிறார். அதற்கு அன்வேஷ் உடன்பட மறுக்கவே, அவரை 3 பேரும் சேர்ந்து சுட்டு கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை புதைத்து விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பியிருக்கின்றனர் என போலீசாரால் நம்பப்படுகிறது. இதில், ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில கடந்த 22-ந்தேதி பாதுகாப்பு படையினருடனான மோதலில் ஜகேஷ் சுட்டு கொல்லப்பட்டார்.

போலீசில் சரண் அடைவது தொடர்பாக மாவோயிஸ்டுகளுக்குள் நடந்த மோதலால் இந்த சம்பவம் நடநதுள்ளது என நம்பப்படுகிறது. அன்வேஷின் உடலை பகாரி வனப்பகுதியில் இருந்து ஒடிசா போலீசார் நேற்று வெளியே எடுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com