மராட்டியம்: ரூ.1-க்கு விற்பனை என பரவிய தகவல்; வணிக வளாகத்தில் திடீர் நெரிசல் - வைரலான வீடியோ

போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று, சலுகை விற்பனை எதுவும் இல்லை என அறிவித்தனர்.
மராட்டியம்:  ரூ.1-க்கு விற்பனை என பரவிய தகவல்; வணிக வளாகத்தில் திடீர் நெரிசல் - வைரலான வீடியோ
Published on

மும்பை

மும்பையில் உள்ள வணிக வளாகத்தில் ரூ.1-க்கு விற்பனை என வதந்தி பரவியதில் நெரிசல் ஏற்பட்டது.

மராட்டியத்தின் மலாட் புறநகரில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதில் இன்று காலை ரூ.1-க்கு ஆடைகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என வதந்தி பரவியுள்ளது.

இந்த தகவல், காட்டுத்தீ போன்று பரவியது. செய்தியை அறிந்ததும் மக்கள் திரளாக கூடி வந்தனர். விளம்பர நோக்கிற்காக இந்த விற்பனை என மக்களிடையே தகவல் பரவியுள்ளது. இதனால், கடைக்கு முன்னால் ஆண்கள், பெண்கள் என பலர் திரண்டு வந்தனர். அவர்கள் வாகனங்களை கடை முன் நிறுத்தி, நீண்டநேரம் காத்திருந்தனர்.

கூட்ட நெரிசல்

இதனால், அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனால் கடை திறக்கப்படாமல் இருந்துள்ளது என கூறப்படுகிறது. அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அது வெறும் வதந்தி என ஒரு சிலர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று, சலுகை விற்பனை எதுவும் இல்லை என அறிவித்தனர். இதனை தொடர்ந்து கூட்டத்தினர் அமைதியாக கலைந்து சென்றனர். அதனால், வன்முறை மற்றும் எதிர்பாராத சம்பவம் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com