

கோலாப்பூர்
மராட்டியத்தில் புனே தொகுதிக்கான எம்.பி.யாக இருப்பவர் முரளிதர் மொஹல். மத்திய மந்திரியான இவர், கோலாப்பூரில் 29 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டபோது, அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகினார். பல ஆண்டுகளாக காயம் பற்றி கவனத்தில் கொள்ளாமல் விட்டு விட்டார். இந்நிலையில், அவருக்கு சமீபத்தில் வலி ஏற்பட்டு உள்ளது. இதனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்வதே ஒரே தீர்வு என கூறி விட்டனர்.
இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், அவருக்கு சிகிச்சை நடந்துள்ளது. இதனால், ஒரு மாதத்திற்கு அவருக்கு ஓய்வு தேவைப்படும் என கூறப்படுகிறது.
இதனை வருத்தத்துடன் மொஹல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, புனே மக்களவை தொகுதி தொடர்பான பணியில் ஈடுபட முடியவில்லை. அரசு அலுவலல் தொடர்பாக நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பயணமும் செய்ய முடியவில்லை.
சிறப்பு வாய்ந்த மராட்டிய கேசரி மல்யுத்த போட்டி தொடர்பான வேலைகளுக்காகவும் தயாராக முடியவில்லை. வலியை விட, பொறுப்புகளை மேற்கொள்ள முடியாத சூழல் அதிக வருத்தம் தருகிறது என மொஹல் கூறியுள்ளார்.