மார்ச் 15: டெல்லி, ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

டெல்லி, ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டெல்லி, ஆந்திரா மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டது.

இதன்படி ஆந்திர மாநிலத்தில் இன்று புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,92,008 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 1,443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 8,83,380 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7,185 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லி மாநிலத்தில் இன்று புதிதாக 368 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை மொத்தம் 6,44,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 3 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 10,944 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 306 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை மொத்தமாக 6,30,799 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 2,321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com