நகைக்கடையின் கதவை வெட்டி எடுத்து ரூ.2 கோடி தங்கம், வெள்ளி கொள்ளை-முகமூடி ஆசாமிகள் கைவரிசை

கர்நாடகாவில் பாகல்கோட்டை அருகே நகைக்கடை கதவை வெட்டி எடுத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங் கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகி றார்கள்.
 நகைக்கடையின் கதவை வெட்டி எடுத்து ரூ.2 கோடி தங்கம், வெள்ளி கொள்ளை-முகமூடி ஆசாமிகள் கைவரிசை
Published on: 

கடைக்குள் புகுந்து கொள்ளை

கர்நாடகா பாகல்கோட்டை (மாவட்டம்) அருகே நவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திகம் பர் என்பவருக்கு சொந்தமான ஓம் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக்கடைக்கு நேற்று முன்தினம்

நள்ளிரவு நேரத்தில் கார் ஒன்றில் மர்ம நபர்கள் 2 பேர் வந்துள்ளனர்.பின்னர் அவர்கள் கடைக்கு முன்பு காரை நிறுத்திவிட்டு கையில் கொண்டு வந்திருந்த நவீன கியாஸ் கட்டர் எந்திரத்தை பயன்படுத்தி, நகைக்கடையின் ஷட்டர் மற்றும் அதில் இருந்த பூட் டுகளையும் வெட்டி எடுத்து உள்ளனர். பின்னர், கடைக்குள் நுழைந்த அவர்கள், அங்கு பாது காப்பாக வைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகளை தாங்கள் கொண்டு வந்திருந்த பைகளில் அள்ளிப்போட்டு கொள்ளையடித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து, கடையில் இருந்து வெளியேறிய அவர்கள் தாங்கள் வந்த காரிலேயே அங்கி ருந்து தப்பி சென்று உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த திகம்பர் கடையின் ஷட்டர், பூட்டு வெட்டப்பட்டு கடையில் கொள்ளை நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், இதுகுறித்து உடனடியாக நவநகர் போலீசாருக்கு தக வல் தெரிவித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த 2 மர்ம நபர் கள் கடையின் ஷட்டர், பூட்டை வெட்டி எடுத்து உள்ளே நுழைந்ததும், பின்னர் தங்கம், வெள்ளி பொருட்களை பைகளில் அள்ளிப்போட்டு கொள்ளையடித்து சென்றதும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தனிப் படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ரூ.2 கோடி மதிப்பு

இந்த சம்பவத்தில் மொத்தமாக திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.. எனினும், நகைகளின் சரி யான எடை கணக்கீடு மற்றும் முழுமையான இழப்பு தொகையை துல்லியமாக அறியும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கடை உரிமையாளர் திகம்பர் தெரிவித் துள்ளார்.இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

X