மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் 24-ந் தேதி விசாரணை

பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 24-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மேகதாது அணை கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு நியமித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை முடித்து வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை மறுதினம் (24-ந் தேதி) விசாரிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com