டெல்லியில் பயங்கரம்: சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற டிரைவர்

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
Published on

டெல்லி,

டெல்லியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் டெல்லியின் மெஹ்ரொலி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதில் மகள் இருந்தார். இந்த குடும்பம் மெஹ்ரொலி பகுதியில் வீடு எதுவுமின்றி சாலையோரம் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு சாலையோரம் உறங்கிய நிலையில் இன்று காலை தம்பதியின் மகளான சிறுமியை காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

டிரைவர் கைது

விசாரணையில் சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை 30 வயதான கார் டிரைவர் அதிகாலை கடத்தி சென்று ஆள்நடமாட்டமற்ற பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கார் டிரைவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொல்லப்பட்ட சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com