ரூ.1,056 கோடி செலவில் இந்திய ராணுவத்துக்கு 1,300 இலகுரக போர் வாகனங்கள் - ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்

ரூ.1,056 கோடி செலவில் இந்திய ராணுவத்துக்கு 1,300 இலகுரக போர் வாகனங்கள் வாங்குவதற்கு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய ராணுவத்துக்கு ரூ.1,056 கோடி செலவில் 1,300 இலகுரக போர் வாகனங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ராணுவ அமைச்சகம் இறுதி செய்துள்ளது. மகிந்திரா டிபென்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற உள்நாட்டு நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.

அந்த நிறுவனம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கிறது. இந்த வாகனங்களில், நடுத்தர ரக எந்திர துப்பாக்கி, கையெறி குண்டு லாஞ்சர், டாங்கி தகர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை பொருத்திச் செல்ல முடியும்.

அடுத்த 4 ஆண்டுகளில் இந்த வாகனங்களை இந்திய ராணுவத்தில் சேர்க்கும் பணி முடிவடையும் என்று ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களுக்கு இது ஒரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பாதுகாப்புத் துறை மேலும் தன்னம்பிக்கை அடைந்து, ஒரு முன்னணி உலக பாதுகாப்பு ஏற்றுமதியாளராக அதன் பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com