

மும்பை,
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது ஹர்ஷா சன்னி (வயது 29) என்ற பெண் பயணியின் டிராலி பையை சோதனையிட்டபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பைக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பாக்கெட்டுகளில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடியே 80 லட்சமாகும். தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த இதையடுத்து ஹர்ஷா சன்னி கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், கைதான ஹர்ஷா சன்னி மாடல் அழகி என்பதும், ஒரு தனியார் வங்கியில் ரிலேஷன்ஷிப் மானேஜராக பணியாற்றி வருவதும், கடந்த ஆண்டு கேரளாவில் நடந்த 'மிசஸ் கேரளா' அழகி போட்டியில் 2-வது இடம்வென்றவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது.
முன்னதாக இதுகுறித்து அந்த பெண்ணின் வக்கீல் பிரபாகர் திரிபாதி நீதிமன்றத்தில் வாதிடுகையில் "எனது கட்சிக்காரர் ஹர்ஷா சன்னி நெயில்-ஆர்ட் மற்றும் மாடலிங் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை பார்ப்பதற்காகவும், சுற்றுலாவுக் காகவும் பாங்காக் சென்றிருந்தார். அங்கு பழகிய நபர் ஒருவர். அவரது நம்பிக்கையை பெற்று இந்த பையை இந்தியாவில் ஒப்படைக்குமாறு கொடுத்துள்ளார். அந்த பைக்குள் சட்டவிரோத பொருட்கள் இருப்பது எனது கட்சிக்காரருக்கு தெரியாது. திட்டமிட்டு கடத்தல் கும்பல் இவரை பகடைக்காயாக பயன்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.